அஸ்வின் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல்…! யாருக்கு என்ன ஆச்சு?

ராஜ்கோட்டில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விலகியுள்ளார். மருத்துவ எமர்ஜென்சி காரணமாக இப்போட்டியில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ” இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உடனடியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதற்கு அவரின் குடும்ப மருத்துவ அவசரநிலையே காரணம். இந்த சவாலான காலங்களில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ), அணியும் அஸ்வினுக்கு முழு ஆதரவு அளிக்கிறது.

சாம்பியன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிசிசிஐ தனது முழு ஆதரவை வழங்குகிறது. வீரர்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மிகவும் முக்கியமானது. இந்த சவாலான நேரத்தில் அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினரின் பிரைவசிக்கு மதிப்பளிக்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொள்கிறது. அஸ்வினுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் பிசிசிஐ தயாராக இருக்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளில் ஒருவரான ராஜீவ் சுக்லா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் ரவிச்சந்திரன் அஸ்வின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால், அவர் உடனடியாக ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் தாயுடன் இருக்க வேண்டும் என்பதால் சென்னைக்கு அஸ்வின் சென்றுள்ளார் என்றும் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அஸ்வின் தாயார் விரைந்து குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

(@ShuklaRajiv) February 16, 2024

நேற்று தான் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி, இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். இங்கிலாந்து அணி வீரர் ஜாக் கிராலி விக்கெட்டை எடுத்தபோது இந்த சாதனையை அவர் படைத்தார். இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்பிளே 619 விக்கெட்டுகளுடன், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். அடுத்த இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.