Kejriwal appears virtually before Delhi court in ED summons case, next hearing on March 16 | கெஜ்ரிவாலுக்கு ஒரு மாதம் நிம்மதி! மார்ச் 16ல் ஆஜராக கோர்ட் உத்தரவு

புதுடில்லி; டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் வரும் மார்ச்- 16 ம் தேதி ஆஜராகுமாறு கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து அமலாக்கத்துறை கைதில் இருந்து ஒரு மாதம் நிம்மதியாக இருக்கலாம்.

புதிய மதுபான கொள்கை உருவாக்கப்பட்டதில் தனியார் பார்கள் அனுமதி மற்றும் மது பான தயாரிப்பாளர்களுக்கு சலுகை வழங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது.

சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இது வரை 6 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இதனையடுத்து அமலாக்கத்துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று ((பிப்-16) ஆஜராக கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்றும் அவர் ஆஜராகவில்லை,

வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராவதாகவும், மேலும் இன்று சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவுள்ளதால் , பட்ஜெட் தயாரிப்பு பணி இருப்பதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரினார். இதனையடுத்து வரும் மார்ச் -16 ல் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் கெஜ்ரிவாலுக்கு ஒரு மாதம் வரை அமலாக்கத்துறை கைது அச்சம் விலகியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.