வேலூர் தாலுகா காவல் நிலையத்துக்குட்பட்ட கணியம்பாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன் – வயது 60. அதே பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரம் – வயது 64. நிலப் பிரச்னை தொடர்பாக, இவர்களுக்குள் பகை நீடித்துவந்தது. இந்த நிலையில், கடந்த 25-07-2019 அன்று கண்ணனின் மாடு, சிங்காரத்தின் நிலத்துக்குள் இறங்கிவிட்டது. ‘பகையைத் தீர்த்துக்கொள்ள இதுதான் சமயம்’ என சிங்காரமும், அவரது மகன்கள் காண்டீபன், மணிகண்டன் ஆகியோரும் சேர்ந்து, கண்ணனை சரமாரியாகத் தாக்கினர். இதில் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்,
இது சம்பந்தமாக, வேலூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, வேலூர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில், நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலையாளிகளான சிங்காரம், அவரது இரண்டு மகன்கள் காண்டீபன், மணிகண்டன் ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்று பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY