விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட ராமு தேவன்பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. நாக்பூர் லைசென்ஸ் பெற்று இயங்கும் இந்த தொழிற்சாலையில் 20-க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி அறைகள் உள்ளன. இந்நிலையில் இந்த ஆலையில் இன்று காலை வழக்கம்போல பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசு மூலப் பொருள் கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் 5 அறைகள் வெடித்து தரைமட்டமாகின. பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் 6 ஆண்கள், 4 பெண்கள் என 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன்படி, கிளியம்பட்டியை சேர்ந்த ரமேஷ்(24), கருப்பசாமி( 29), மேட்டூரை சேர்ந்த அம்பிகா, சாந்தா(43) சங்கரமூர்த்திபட்டி சமத்துவபுரத்தை சேர்ந்த முத்து, நாச்சியார்பட்டியை சேர்ந்த அபேராஜ், ராமு தேவன்பட்டியை சேர்ந்த முருகஜோதி உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி ரெங்கம்மாள், சிவக்குமார், முத்துக்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை போலீஸார் மற்றும் ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பட்டாசு வெடி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி, உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் தீயணைப்பு மீட்பு வாகனங்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பட்டாசு வெடி விபத்தில் மேலும் பலர் காயமடைந்து இருக்கின்றனர்.
அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடி விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிவிபத்து குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவியாகவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY