மதுரை பல பாஜகவினர் அதிமுகவில் இணைவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இன்று மதுரை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம், ”எத்தனை கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுகின்றன என்று பொறுத்திருந்து பாருங்கள். யாராலும் இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது என உச்சநீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் தீர்ப்பு வாங்கிவிட்டோம். அதிமுக கூட்டணி தொடர்பாகப் பொறுத்திருந்து பாருங்கள், தேர்தல் தேதி அறிவித்தபிறகுதான் கூட்டணி முழுமைபெறும். […]
