எத்தனையோ கிரீம் தடவியாச்சு, எவ்வளவோ சீரம் போட்டாச்சு, வித விதமா ஃபேஷியல் பண்ணிப் பார்த்தாச்சு, ஆனா சருமப் பிரச்னைகள் எதுவுமே சரியாக மாட்டேங்குது,” என நம்மில் பல பேர் இன்னும் புலம்பிக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனாலும், நம் சருமத்தை பொலிவுடனும், ஈரப்பதத்துடனும் தக்க வைத்துக்கொள்வதற்கு ஃபேஷியல் செய்துகொள்வது வழக்கமாகிவிட்டது. பார்லரிலோ, வீட்டிலோ, தேர்ந்த பிராண்டின் ஃபேஷியல் கிட்டை உபயோகப் படுத்துகிறோமா என்பதை உறுதி செய்த பின், கிளென்சிங், ஸ்க்ரபிங், மசாஜிங், ஃபேஸ் பேக் என முறையான செயல் முறைகளோடு ஃபேஷியல் செய்துகொள்வோம். இதனால், நம் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீக்கப்படுவதுடன், ரத்த ஓட்டம் பெருகி, முகத்திற்கு புது பொலிவும், புத்துணர்ச்சியும் வருகிறது.

ஆனால், வழக்கமாக செய்யப்படும் ஃபேஷியல்களில் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், கருந்திட்டுகள், பிக்மென்ட்டேஷன் போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வுகாணமுடியாது, மாறாக முகத்திற்கு வெறும் மேலோட்டமான பொலிவை மட்டுமே தரும் என்கிற விமர்சனமும் வருகிறது. ஆனால், இதற்கு மாற்றாக, சரும மருத்துவர்களால் பரிந்துரைக்கபட்ட வேதி பொருள்களுடன் அறிமுகப்படுத்தபட்டிருக்கும் மெடி-ஃபேஷியல் பெண்களின் கவனத்தை வெகுவாகவே ஈர்த்திருக்கிறது.
இது குறித்து நேச்சுரல்ஸ் பியூட்டி சலோனின் ஸ்கின் டிரெய்னர் அனுஷா செல்வமிடம் கேட்டபோது, “நாம் பார்லரில் செய்துகொள்ளும் ஃபேஷியல்களை காஸ்மெட்டிக் ஃபேஷியல் (Cosmetic Facial) என்று கூறுவோம். இது நம் சருமத்தில் மேலாக இருக்கும் சூப்பர்ஃபிஷியல் லேயரில் (Superficial Layer) மட்டுமே படிந்து, சருமத்திற்கு தற்காலிக பொலிவைக் கொடுக்கிறது.
ஆனால்ஆனால், மெடி-ஃபேஷியல் (Medi-Facial) அல்லது ஃபார்மாசூட்டிகள் ஃபேஷியல் (Pharmaceutical Facial) எனக் கூறப்படும் இந்தப் புதுவித ஃபேஷியல் முறை, சருமத்தின் அடி ஆழம் வரை சென்று பிரச்னைக்குரிய நிலைகளை சரி செய்கிறது. தொடர்ந்து 2 அல்லது 3 முறை மெடி-ஃபேஷியல் செய்தாலே, முகப்பருக்கள், தழும்புகள், கருந்திட்டுகள், சருமம் உலர்தல் போன்ற பிரச்னைகள் சரியாகிவிடும். தேவைக்கு ஏற்ப மெடி-ஃபேஷியலின் விதமும் மாறுபடும்.

மெடி-ஃபேஷியல் செய்யத் தேவையான அத்தனை அழகு சாதனங்களிலும், சரும பராமரிப்பிற்கு அவசியமான, ஆக்டிவ்ஸ்(Actives) எனக் கூறப்படும், இயற்கை உட்பொருள்கள் அடங்கி இருக்கின்றன.
கழுத்தில் உருவாகும் கருமையை (பிக்மென்ட்டேஷன்) அகற்ற கிளைகாலிக் ஆக்டிவ் (Glycolic Active) மற்றும் லாக்டிக் ஆக்டிவ் (Lactic Active) நிறைந்த கிரீம்கள் மற்றும் சீரம்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், உலர்ந்த சருமத்தை மிருதுவாக்க ஹையலுரானிக் ஆக்டிவ்ஸ் (Hyaluronic Actives) மற்றும், முகப்பருக்கள், தழும்புகள் ஆகியவற்றை அகற்றுவதற்கு சாலிசிலிக் ஆக்டிவ்ஸ் (Salicylic Actives) உள்ளடங்கிய பொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன.
இவை அனைத்துமே, சருமத்திற்கு தேவையான ஊட்டத்தைத் தரும் வேதிப் பொருள்களாக இருப்பதால் இதன் மூலம் எந்த விதப் பக்கவிளைவுகளும் நம் சருமத்திற்கு வராது” என்கிறார் அனுஷா.
மெடி- ஃபேஷியல் செய்ய பெண்கள் ஏன் தயங்குகிறார்கள்?
மெடி-ஃபேஷியல் என்று சொன்னாலே நமக்குள் ஒரு வித பயம் வந்து விடுகிறது. நம் சருமத்திற்கு சேருமா, சேராதா? நிறைய ரசாயனப் பொருள்கள் இருக்குமோ?
உண்மையில், இதில் நாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.
பொதுவாக, மெடி-ஃபேஷியல் செய்தால் சருமத்தில் ஏற்கெனவே இருக்கும் சரும துவாரங்களும் (Pores), சூரியனால் பாதிக்கப்பட்ட பகுதிகளும் எரிச்சலுக்குள்ளாகும் என்று பலர் கூறி நாம் கேட்டதுண்டு. ஆனால், சில இடங்களில் மருத்துவர்கள் அதிக ரசாயனம் இருக்கும் கெமிக்கல் பீல்களை பயன்படுத்துவதுண்டு. இதனால், மெடி-ஃபேஷியல் செய்த பின் இரண்டு நாள்கள் வெளியே போகக்கூடாது என்றெல்லாம் அறிவுறுத்துவதுண்டு.
ஆனால், நேச்சுரல்ஸால்(Naturals) பரிந்துரைக்கப்படும் ஸ்கின்-கியூ ஆர்-எக்ஸ் (SkinQ Rx) என்ற நிறுவனத்தில், சருமத்தை பாதிக்காத வேதிப் பொருள்களை கொண்டே மெடி-ஃபேஷியல் செய்யப்படுகிறது.
மேலும், மெடி-ஃபேஷியல் செய்யப் பயன்படுத்தப்படும் அனைத்து அழகு சாதனங்களிலும் சருமத்திற்கு ஆரோக்கியத்தைத. தரும் வேதிப்பொருள்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றன.
நிறைய பேர், மெடி ஃபேஷியல் செய்யும்போது அதிக வேதிப்பொருள்கள் நிறைந்த பூச்சுகள் முகத்தில் பயன்படுத்தபடும் என்று பயப்படுவார்கள். ஆனால், இதில் 15% குறைவான வேதிப்பொருள்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
வழக்கமாகச் செய்யப்படும் ஃபேஷியல்களில் வெள்ளை மற்றும் கரும்புள்ளிகள் ஸ்டீம் கொடுத்தபின் ஊசியால் குத்தி நீக்கப்படும். ஆனால், மெடி-ஃபேஷியலில் ஸ்க்வீசிங் டெக்னாலஜி மூலம் வெள்ளை மற்றும் கரும்புள்ளிகள் நீக்கப்படுகின்றன.

மெடி-ஃபேஷியலில் நாம் என்ன எதிர்பார்க்கலாம்?
சருமப் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு… உங்களின் சரும பிரச்னைகளுக்கு மருத்துவம் சார்ந்த தீர்வு தேவைப்படும் பட்சத்தில் நீங்கள் மெடி- ஃபேஷியலை தேர்வு செய்யலாம். ஆனால், காஸ்மெட்டிக் ஃபேஷியலோ அல்லது மெடி-ஃபேஷியலோ, எதுவாக இருந்தாலும் Naturals-ன் தேர்ந்த அழகியல் நிபுணர் பரிந்துரைக்கும் ஃபேஷியலை செய்து கொள்வதே நல்லது.
மேலும் விவரங்களுக்கு:
உடனே, உங்கள் அருகில் இருக்கும் Naturals Saloon அணுகவும்.
Whatsapp number 909262626 | Whatsapp link: