![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/02/1708555575_NTLRG_20240221154924181020.jpg)
ஏழு வருடங்களுக்கு பிறகு குருவி பாப்பாவுக்காக திரும்பி வந்த தாமிரபரணி பானு
தாமிரபரணி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை பானு. அதன்பிறகு தமிழில் சில படங்களில் நடித்தாலும், முக்தா என்கிற பெயரில் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்து வந்தார். அதைத்தொடர்ந்து திருமண வாழ்க்கையில் நுழைந்த தாமிரபரணி பானு, கியாரா என்கிற பெண் குழந்தைக்கு தாயாக மாறி பொறுப்பான குடும்பத் தலைவியாக மாறிவிட்டார். இதனால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட பானு தற்போது தனது மகள் ஓரளவிற்கு வளர்ந்து விட்டதால் ஏழு வருட இடைவெளி விட்டு மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார்.
சீனியர் நடிகர் வினீத் கதாநாயகனாக நடித்துள்ள குருவி பாப்பா என்கிற படத்தில் அவரது மனைவி கதாபாத்திரத்தில் டீன் ஏஜ் பெண்ணுக்கு தாயாக நடித்துள்ளார் பானு. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் இஸ்லாமிய பின்னணியில் இதன் கதை உருவாகி இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு பானு மீண்டும் திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.