நார்வே,
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டுவிட்டரை 2022- இல் வாங்கி எக்ஸ் என பெயர்மாற்றம் செய்தார்.
சுதந்திர பேச்சை வெளிப்படுத்த இதனை செய்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், ரஷியா- உக்ரைன் போரில் உக்ரைன் ராணுவத்துக்கு செயற்கைக்கோள்வழி தொடர்பினை அவரது நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்தது.
இவற்றுக்காக எலான் பெயரை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கலாம் என மரியஸ் நில்சன் தெரிவித்ததாக பொலிட்கோ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
முற்போக்கு கட்சியை சேர்ந்த மரியஸ் நில்சன் , ரஷியா – உக்ரைன் போரின் போது செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை வழங்கியது, சுதந்திரமான பேச்சு மற்றும் திறந்த உரையாடலுக்கான ஆதரவுக்காக 2024-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை எலான் மஸ்க்கிற்கு வழங்க வேண்டும் என முன்மொழிந்துள்ளார்.