பாஸ்பாலை கைவிட்ட இங்கிலாந்து…? பும்ரா இல்லாமல் ஜோ ரூட் சதம் – இன்று நடந்தது என்ன?

IND vs ENG 4th Test: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் வென்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும், மறுபுறம் இங்கிலாந்து வென்றால் தொடரின் வெற்றியை தரம்சாலாவில் நடைபெறும் 5ஆவது போட்டிதான் தீர்மானிக்கும்.  

அந்த வகையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த நான்காவது போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு மாற்றத்தை செய்தது. பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஆகாஷ் தீப் அறிமுகம் செய்யப்பட்டார். இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆல்-ரவுண்டர் ரெஹான் அகமது நாடு திரும்பும் நிலையில் அவருக்கு பதில் சோயப் பஷீர் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டார். மார்க் வுட்டுக்கு பதில் ஒல்லி ராபின்சன் அணியில் இடம்பெற்றார். 

முதல் நாள் முடிவில் (90 ஓவர்கள்) இங்கிலாந்து அணி 302 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜோ ரூட் 106 ரன்களுடனும், ராபின்சன் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். பென் ஃபோக்ஸ் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

Stumps on the opening day in Ranchi!
wickets in the final session for #TeamIndia as England move to 302/7

Scorecardhttps://t.co/FUbQ3MhXfH#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/zno8LN6XAI

— BCCI (@BCCI) February 23, 2024

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.