What to watch on Theatre and OTT: Manjummel Boys, Poacher, Sundaram இந்த வாரம் இத்தனை திரைப்படங்களா?

Manjummel Boys (மலையாளம்)

Manjummel Boys

சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் சாஹிர், சந்து சலீம்குமார், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Manjummel Boys’. கொடைக்கானல் சுற்றுலா செல்லும் நண்பர்களில் ஒருவர் எதிர்பாராதவிதமாக குணா குகையில் இருக்கும் குழியில் மாட்டிக் கொள்கிறார். அவரைக் காப்பாற்றப் போராடுவதுதான் இதன் கதைக்களம். சாதாரண ஒரு சம்பவத்தை சர்வைவல் திரைப்படமாக மாற்றி சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் இத்திரைப்படம் நேற்று (பிப்ரவரி 22ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Birthmark (தமிழ்)

Birthmark

விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் மிர்னா, ஷபீர் கல்லரக்கல், தீப்தி ஓரின்டேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Birthmark’. மன ரீதியாக பாதிப்பிற்குள்ளான கணவனுக்கும், நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் உளவியல் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான இது, இன்று (பிப்ரவரி 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ரணம் (தமிழ்)

ரணம் (தமிழ்)

ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரணம்’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது, இன்று (பிப்ரவரி 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Operation Laila (தமிழ்)

Operation Laila

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், பாபூஸ் பாபுராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Operation Laila’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது, இன்று (பிப்ரவரி 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பாம்பாட்டம் (தமிழ்)

பாம்பாட்டம்

வி.சி. வடிவுடையான் இயக்கத்தில் ஜீவன், மல்லிகா ஷெராவத், சுமன், ரித்திகா சென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பாம்பாட்டம்’. அட்வன்சர் பேன்டஸி திரைப்படமான இது, இன்று (பிப்ரவரி 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பைரி (தமிழ்)

பைரி (தமிழ்)

ஜான் கிளாடி இயக்கத்தில் மேகனா எலன், சரண்யா ரவிச்சந்திரன், ஜான் கிளாடி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பைரி’. தாய் – மகனுக்குமான உறவை புறா பந்தயத்தின் பின்னணியில் சொல்லும் இத்திரைப்படம், இன்று (பிப்ரவரி 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வித்தைக்காரன் (தமிழ்)

வித்தைக்காரன் (தமிழ்)

வெங்கி இயக்கத்தில் சதீஷ், ஜான் விஜய், மதுசூதன் ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வித்தைக்காரன்’. மெஜிஸியனாக இருக்கும் கதாநாயகன், தன்னுடைய மேஜிக் வித்தைகளை வைத்து கடத்தல்காரர்களையும், அவர்கள் கடத்திய பொருள்களையும் கண்டுபிடிப்பதுதான் இதன் கதைக்களம். காமெடி கலந்த மேஜிக் திரில்லர் திரைப்படமான இது, இன்று (பிப்ரவரி 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Glassmates (தமிழ்)

Glassmates (தமிழ்)

சரவண சக்தி இயக்கத்தில் அங்கையற்கண்ணன், அபி நட்சத்திரம், மயில்சாமி, டி.எம். கார்த்திக் சீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிளாஸ்மேட்ஸ்’. குடிப் பழக்கத்தை விடுவதைப் பற்றிய ஜாலியான திரைப்படமான இது, இன்று (பிப்ரவரி 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நினைவெல்லாம் நீயடா (தமிழ்)

நினைவெல்லாம் நீயடா (தமிழ்)

ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜின், மனோபாலா, யுவலட்சுமி, காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நினைவெல்லாம் நீயடா’. காதல் திரைப்படமான இது இன்று (பிப்ரவரி 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Siddharth Roy (தெலுங்கு)

Siddharth Roy (தெலுங்கு)

வி.யேஷஸ்வி இயக்கத்தில் மேத்யூ வர்கீஸ், தீபக் சரோஜ், தன்வி நேகி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Siddharth Roy’. காதல் திரைப்படமான இது, இன்று (பிப்ரவரி 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Sundaram Master (தெலுங்கு)

Sundaram Master (தெலுங்கு)

கல்யாண் சந்தோஷ் இயக்கத்தில் ஹர்ஷா செமுடு, திவ்யா ஸ்ரீபாதா, சைது பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sundaram Master’. அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்கும் சுந்தரம் என்பவரைப் பற்றிய நெகிழ்ச்சியான கதைதான் இந்தப் படம். இது இன்று (பிப்ரவரி 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Crack (இந்தி)

Crack (இந்தி)

ஆதித்யா தத் இயக்கத்தில் வித்யுத் ஜம்வால், அர்ஜுன் ராம்பால், நோரா ஃபதேஹி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Crack’. ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது, இன்று (பிப்ரவரி 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Article 370 (இந்தி)

Article 370

ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே இயக்கத்தில் யாமி கெளதம், பிரியாமணி, கிரண் கர்மார்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Article 370’. காஷ்மீருக்கு இருந்த சிறப்புச் சட்டப்பிரிவான 370-யை நீக்கும் சமயத்தில் அப்பகுதியின் அசாதாரண சூழலைக் கட்டுப்படுத்த களமிறங்கிய பெண் பாதுகாப்பு அதிகாரியைப் பற்றிய கதை இது. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது, இன்று (பிப்ரவரி 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

All India Rank (இந்தி)

All India Rank (இந்தி

வருண் குரோவர் இயக்கத்தில் சசி பூஷன், ஷீபா சத்தா, கைலாஷ் கௌதமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘All India Rank’. 17 வயதான விவேக், மிகந்த போட்டி நிறைந்த IIT நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதற்காக வீட்டை விட்டுச் சென்று படிக்கிறார். அவர் தனது இலக்கை அடைந்து நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றாரா என்பதை ஜாலியாகவும், கனவைத் துரத்திச் செல்லும் இளைஞரின் கதையாகவும் சொல்லுகிறது இத்திரைப்படம். இது இன்று (பிப்ரவரி 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Mean Girls (ஆங்கிலம்)

Mean Girls (ஆங்கிலம்)

சமந்தா ஜெய்ன், ஆர்டுரோ பெரெஸ் ஜூனியர் இயக்கத்தில் அங்கூரி ரைஸ், ரெனி ராப், ஆலி கிராவல்ஹோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Mean Girls’. கல்லூரி நண்பர்களின் காதல், நட்பு உள்ளிட்டவற்றை ஜாலியாகச் சொல்லும் இத்திரைப்படம் இன்று (பிப்ரவரி 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Demon Slayer: Kimetsu No Yaiba – To the Hashira Training (ஜாப்பனிஸ்)

Demon Slayer: Kimetsu No Yaiba – To the Hashira Training

ஹருவோ சோடோசாகி இயக்கத்தில் உருவாகியுள்ள ஜப்பானிய மொழி திரைப்படம் இது. ‘அனிமி’ திரைப்படமான இது இன்று (பிப்ரவரி 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்

Mea Culpa (ஆங்கிலம்)

Mea Culpa

டைலர் பெர்ரி இயக்கத்தில் கெல்லி ரோலண்ட், ட்ரெவண்டே ரோட்ஸ், கெர்ரி ஓ’மல்லி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Mea Culpa’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வார வெப்சீரிஸ்கள்

Poacher (இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு) – Amazon Prime Video

Poacher

ரிச்சி மேத்தா இயக்கத்தில் நிமிஷா சஜயன், ரோஷன் மேத்யூ, திபியேந்து பட்டாச்சார்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Poacher’. யானை தந்தத்தை வேட்டையாடுபவர்களைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிற்க வைத்து தண்டனை வாங்கிக் கொடுக்கப் போராடும் வனத்துறை மற்றும் தன்னார்வக் குழுக்களின் கதைதான் இது. க்ரைம் திரில்லர் வெப்சீரிஸான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Avatar: The Last Airbender (ஆங்கிலம்) – Netflix

Avatar: The Last Airbender

ஆல்பர்ட் கிம்மின் ஆக்கத்தில் கோர்டன் கோர்மியர், கியாவென்டியோ, இயன் ஓஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Avatar: The Last Airbender’. அவதார் என்னும் சிறுவன், ஐம்பூதங்களின் உதவியால் நிகழ்த்தும் சாகசங்கள் நிறைந்த அட்வன்சர்கள்தான் இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Will Trent – Season 2 (ஆங்கிலம்) – Disney + Hotstar

Will Trent – Season 2

லிஸ் ஹெல்டன்ஸ், டேனியல் டி. தாம்சன் இயக்கத்தில் ரமோன் ரோட்ரிக்ஸ், எரிகா கிறிஸ்டென்சன், ஐந்தா ரிச்சர்ட்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Will Trent’. அமெரிக்க எழுத்தாளர் கரின் ஸ்லாட்டரில் திரில்லர் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் இந்த வெப்சீரிஸின் இரண்டாவது சீசன் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Constellation (ஆங்கிலம்) – Apple Tv +

Constellation

ஜோசப் சிடார், ஆலிவர் ஹிர்ஷ்பீகல், மைக்கேல் மேக்லாரன் ஆகியோர் இயக்கத்தில் நூமி ராபேஸ், ஜொனாதன் பேங்க்ஸ், ஜேம்ஸ் டி’ஆர்சி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Constellation’. சயின்ஸ் பிக்‌ஷன் வெப்சீரிஸான இது ‘Apple TV+’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

சிங்கப்பூர் சலூன் (தமிழ்) – Amazon Prime Video

சிங்கப்பூர் சலூன்

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, மீனாக்ஷி சௌத்ரி, கிஷன் தாஸ், தலைவாசல் விஜய், லால், சத்தியராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. சலூனில் முடிதிருத்தம் செய்யும் சாச்சாவின் (லால்) அபாரத் திறமையைப் பார்த்துத் தனும் பெரிய ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் எனக் கனவு காணும் ஆர்.ஜே.பாலாஜி, ‘முடிதிருத்துவது வெறும் தொழில் அல்ல கலை’ என தன் கனவை சாத்தியப்படுத்தினாரா என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

மலைக்கோட்டை வாலிபன் (மலையாளம்) – Disney + Hotstar

மலைக்கோட்டை வாலிபன் விமர்சனம்

`ஜல்லிக்கட்டு’, `சுருளி’, `நண்பகல் நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட பிரபல மலையாள திரைப்படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் `மலைக்கோட்டை வாலிபன்’. வரலாற்று பேன்டஸி படமான இதில் மோகன்லால் நடித்துள்ளார். இத்திரைப்படம் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Saw X (ஆங்கிலம்) – Lionsgate

Saw X

கெவின் கிரேட்டர்ட் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது ‘Saw X’ திரைப்படம். ஹாரர் திரில்லர் படங்களின் இலக்கணத்தை மாற்றிய ‘Saw’ படத்தொடரின் பத்தாவது பாகம்தான் இத்திரைப்படம். சைக்கோ வில்லானான டோபின் பெல், தனக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்களைச் சிறைப்படுத்தி அவர்களைக் கொடுரமான முறையில் டாஸ்க் வைத்து ஒவ்வொருத்தராகக் கொல்கிறார். உயிரோடு இருந்தவர்கள் அந்தக் கொடூரமான கொலைகாரனிடமிருந்து தப்பிதார்களா என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Lionsgate Play’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான படம் இது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.