திமுக நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாஃபர் சாதிக் மீது போதை மருந்து கடத்தல் தொடர்பான வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக தலைமை அறிவித்திருந்தது. இந்த நிலையில் அமீர் இயக்கி வரும் “இறைவன் மிகப் பெரியவன்” என்ற படம் ஜாஃபர் சாதிக் தாயரிப்பில் உருவாகி வருவதாகத் தகவல் வெளியானது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இயக்குனர் அமீர், “நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் […]