Cough medicine case: 22 people, including an Indian, were jailed for 20 years in Uzbekistan | இருமல் மருந்து விவகாரம்: உஸ்பெஸ்கிஸ்தானில் இந்தியர் உள்பட 22 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

தாஷ்கண்ட்: உஸ்பெஸ்கிஸ்தானில் இந்திய இருமல் மருந்து உட்கொண்ட 68 பேர் பலியான வழக்கில், இந்தியர் உள்பட 22 பேருக்கு 20 வருடம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்தது.

இந்தியாவிடமிருந்து வாங்கப்பட்ட இருமல் மருந்தில் ‘நச்சு’ ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பதாக ஆப்ரிக்க நாடுகளில் புகார் எழுந்தது.

இந்நிலையில் உஸ்பெஸ்கிஸ்தானில் கடந்த 2022 டிசம்பரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்பை குடித்த 68-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாயினர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியாவின் உ.பி. மாநிலம் நொய்டாவில் மரியான் பயோடெக் என்ற இருமல் மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனை இறக்குமதி செய்த உஸ்பெகிஸ்தானில் தான் இந்திய இருமல் மருந்தை உட்கொண்ட 68 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக உஸ்பெஸ்கிஸ்தானின் தாஷ்கண்ட் சிட்டி கோர்ட்டில் இந்தியர் உள்பட 22 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் 22 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.