மஹிந்திராவின் தார் எஸ்யூவி மாடலில் கூடுதலாக 5-டோர் பெற்ற தார் அர்மடா அறிமுகம் ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெறும் என நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ ராஜேஷ் ஜெஜூரிகர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து நாடு முழுவதும் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற தார் எஸ்யூவி 5 கதவுகளை பெற்ற மாடல் மீதான எதிர்பார்ப்பு பரவலாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முக்கிய விபரங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது.
5 டோர் தார் எஸ்யூவி பற்றி சில முக்கிய விவரங்கள்
- 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் mStallion என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் mHawk என்ஜின் என இருவிதமான ஆப்ஷனில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.
- 5-டோர் மஹிந்திரா Thar எஸ்யூவி இண்டிரியரில் 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் Adrenox கனெக்ட்டிவ் வசதிகள் இடம்பெற்றிருக்கும்.
- 4X4 ஆல் வீல் டிரைவ் உடன் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக அமைந்திருக்கும்.
- தோற்ற அமைப்பில் மாறுபட்ட கிரில் பெற்ற வட்ட வடிவ எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் உடன் இணைந்த பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் உள்ளன.
- டேஸ்கேம், சன்ரூஃப், பின்புற இருக்கைகளுக்கு ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்ட வசதிகளும் பெற உள்ளது.
தற்பொழுது விற்பனையில் உள்ள 3 கதவுகளை பெற்ற தார் எஸ்யூவி மாடலுக்கு அமோகமான வரவேற்பு உள்ளதால் முன்பதிவு எண்ணிக்கை 71,000க்கு மேல் உள்ளதால் டெலிவரி தொடர்ந்து காலதாமதமாகி வருகின்றது. தற்பொழுது காத்திருப்பு காலம் 4×2 டீசல் மாடல்களுக்கு 6 மாதங்கள் வரை உள்ளது. குறைவான காத்திருப்பு காலம் 4×4 மாடலுக்கு 2-3 மாதங்களாகவும் உள்ளது.
புதிதாக வரவுள்ள 5-டோர் மஹிந்திராவின் தார் எஸ்யூவிக்கு பிரத்தியேகமாக அசெம்பிளி லைனில் தயாரிக்கப்பட உள்ளது.
The post 5-டோர் தார் அர்மாடவின் அறிமுகத்தை உறுதி செய்த மஹிந்திரா appeared first on Automobile Tamilan.