கலபுரகி : வாக்குறுதித் திட்டங்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது கலபுரகி தெற்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., அல்லம்மா பிரபு பாட்டீலும் இணைந்துள்ளார். “வாக்குறுதித் திட்டங்களால் வளர்ச்சிப் பணிகள் நடக்கவில்லை,” என, வருத்தம் தெரிவித்துள்ளார்.
கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தொகுதி வளர்ச்சி அடைய வேண்டும் என்ற ஆசையில் இருந்தேன். ஆனால், ஐந்து வாக்குறுதித் திட்டங்களுக்கு, ஆண்டுதோறும் 65,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் வளர்ச்சிப் பணிகள் நடக்காமல், மக்களிடம் திட்டு வாங்குவது தலைவிதியாக உள்ளது.
ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்றால், பெரும்பாலான நிதி, வாக்குறுதித் திட்டங்களுக்கு சென்று விடுகிறது. தலா ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் ஒன்பது கோடி ரூபாய், ஆண்டுதோறும் ஒதுக்கப்படுகிறது.
இதில், தலா ஒரு கிராமம், ஒரு வார்டுக்கு 20 லட்சம் ரூபாய் வீதம் 38 கிராமங்கள், 23 வார்டுகளுக்கு பிரித்து தர வேண்டும்.
வளர்ச்சிப் பணிகளுக்காக ஏற்கனவே டெண்டர் கோரப்பட்டு உள்ளது. வடிகால் வாரிய பணிக்காக, நான்கு கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement