ட்ரூ காலர் செயலி மிகவும் பிரபலமான அழைப்பு செயலி ஆகும். உங்கள் தொடர்பில் இல்லாதவர்கள் யார் அழைத்தாலும் அவர்களின் பெயர் மற்றும் புகைப்படத்தைக் கூட காட்டும் செயலி தான் இது. இந்த செயலியை பெரும்பாலும் எல்லோரும் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும், உங்கள் மொபைல் எண்ணை சேமித்து வைத்திருக்கும் யாரோ ஒருவர் பயன்படுத்தினால் கூட ட்ரூகாலரில் உங்களைப் பற்றிய டேட்டா இருக்கும்.
அது உங்களுக்கான பிரைவசி ஆபத்து என கருதினால், ட்ரூகாலரில் இருந்து உங்களுடைய மொபைல் எண்ணை முழுவதுமாக நீக்க முடியும். யூசர்களின் பிரைவசியைக் கருத்தில் கொண்டு Truecaller அதன் டேட்டா சென்டரிலிருந்து உங்கள் போன் எண்ணை அகற்றுவதற்கான ஆப்சனை வழங்குகிறது. இருப்பினும், இதற்கு உங்கள் Truecaller கணக்கையும் நீங்கள் நிரந்தரமாக நீக்க வேண்டும்.
ட்ரூகாலர் கணக்கை நீக்குவது எப்படி?
1. உங்கள் மொபைல் சாதனத்தில் Truecaller செயலியை திறக்கவும்.
2. ஸ்கிரீன் மேல் வலது மூலையில் அமைந்துள்ள மூன்று புள்ளிகள் அல்லது கியர் ஐகானைத் கிளிக் செய்யவும்.
3. ‘Settings’ என்பதைத் தேர்ந்தெடுத்து, ‘Privacy center’ செல்லவும்.
4. அங்கு ‘Deactivate’ பட்டனை கிளிக் செய்யவும்.
5. இப்போது ஸ்கிரீனில் கேட்கும் எஸ் என்பதை மீண்டும் கிளிக் செய்தால் உங்கள் கணக்கு டி ஆக்டிவேட் ஆகும்.
ட்ரூகாலரில் இருந்து உங்கள் தொலைபேசி எண்ணை அகற்றுவது எப்படி?
1. ஏதேனும் ஒரு பிரவுசரை பயன்படுத்தி https://www.truecaller.com/unlisting – தளத்துக்கு செல்லவும்
2. இந்தியாவின் மொபைல் குறியீடான 91 -ஐ அழுத்தி, மொபைல் எண்ணை பதிவிட வேண்டும்.
3. ‘அன்லிஸ்ட் ஃபோன் நம்பர்’ பட்டனை கிளிக் செய்யவும்.
இந்தப் வழிகளை பின்பற்றினால், உங்கள் Truecaller கணக்கு செயலிழக்கப்படும். உங்கள் தொலைபேசி எண் ட்ரூகாலர் டேட்டா சென்டரில் இருந்தும் நீக்கப்படும்.