இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணிப்பவர்களுக்கு அல்லது யாரேனும் நபருக்கு அநீதி இழைக்கப்படுமாயின் 365 நாட்களும் எந்த ஒரு நேரத்திலும் 1958 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது செய்தியாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்..
தான் அது தொடர்பாக அறிவித்தலொன்றை வழங்குவதாகவும், ஏதேனும் முறைகேடான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.
அத்துடன், இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகளுக்கு சாதாரணமாக ஏனைய துறை சாரதிகளை விட அதிக வரவேற்பு காணப்படுவதாக தான் கேள்விப்பட்டிருப்பதுடன் நல்ல குணம் மற்றும் பாதுகாப்பு வழங்கக்கூடிய நபர்களே இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களில் சேவை ஆற்றுவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.