மைசூரு ; ”மீனவர் சமூகத்தின் பொருளாதார தன்னிறைவுக்கான தேசிய திட்டத்தை, மத்திய அரசு அறிவிக்க வேண்டும்,” என, மாநில காங்கிரஸ் மீனவர் பிரிவுத் தலைவர் மஞ்சுநாத் வலியுறுத்தினார்.
மைசூரு காங்கிரஸ் பவனில் நேற்று மாவட்ட ஊரக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்த மாவட்ட மீனவர் மாநாட்டில் மஞ்சுநாத் பேசியதாவது:
காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மீனவர் பெண்களுக்கான கடன் வசதி, 50,000 ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என கூறியிருந்தது. சொன்னது போலவே மீனவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
10,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அரசின் திட்டங்களை மக்களுக்கு, கட்சி செயல்வீரர்கள் தெரியப்படுத்த வேண்டும்.
காங்கிரஸ் தேசிய தலைவராக ராகுல் இருந்தபோது, மீன் விற்பனையாளர்களின் தொழிலாளர் சமூகத்தை, அரசியல் ரீதியாக முன்னுக்கு கொண்டுவர இப்பிரிவை துவக்கினார்.
உழைக்கும் சமூகத்துக்கும் தொழில்நுட்ப வசதி கிடைக்க வேண்டும். பொருளாதார பிரச்னைகளை தீர்க்க அரசு பல திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement