Drinking water cut in Bangalore severely affects people | பெங்களூரில் குடிநீர் கட் மக்கள் கடும் பாதிப்பு

பெங்களூரு ; பழுது நீக்கும் பணியால், பெங்களூரு நகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் கடந்தாண்டு தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை சரியாக பெய்யவில்லை.

இதனால், ஆறுகளில் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர் குறைந்ததால் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இல்லை.

இதனால், குடியிருப்பு பகுதிகளுக்கும், தொழில்துறையினருக்கும் தண்ணீர் வினியோகிப்பதில் அரசு திணறுகிறது.

இதற்கிடையில், பெங்களூரு ஜம்பு சவாரி தின்னே பகுதியில் குடிநீர் குழாய்கள் பழுது நீக்கும் பணி நேற்று துவங்கியது. இன்று வரை பழுது நீக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில், நகரில் பெரும்பாலான பகுதிகளில், நேற்று காலை 6:00 மணி முதல், இன்று காலை 6:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

எங்கெங்கு நிறுத்தம்?

பெங்., தெற்கு மண்டலம்: பி.எச்.இ.எல்., லே அவுட், சீனிவாசநகர், ஜெய் மாருதிநகர், நந்தினி லே – அவுட், சாகம்மா லே – அவுட், நரசிம்ம சுவாமி லே – அவுட், முனேஸ்வரா நகர், ஞானஜோதி நகர், ஞானகங்காநகர், மல்லத்தஹள்ளி, என்.ஜி.இ.எப்., லே – அவுட், ஐ.டி.ஐ., லே – அவுட், ரயில்வே லே – அவுட், ஆர்.எச்.பி.சி.எஸ்., லே – அவுட், பைரவேஸ்வராநகர், சுங்கதகட்டே, ஜெய லக் ஷ்மம்மா லே – அவுட், கெப்பஹள்ளா, சந்தனா லே – அவுட், சந்திரசேகர் லே – அவுட், நரசாபுரா, வருவாய் லே – அவுட், முலகட்டம்மா லே – அவுட், பாபரெட்டிபாளையா, பி.இ.எல்., முதல், 2ம் கட்டம், பிலேகஹள்ளு, பேடரஹள்ளி, உபகார் லே – அவுட்.

பெங்., கிழக்கு: ஏ.நாராயணபுரா, உதய்நகர், ஆந்திரா காலனி, வி.எஸ்.ஆர்.லே – அவுட், இந்திரா காந்தி தெரு, ஜோதி நகர், துர்காமஹால், சாகம்மா லே – அவுட், விஞ்ஞானநகர், அக்சய்நகர், எம்.இ.ஜி., லே – அவுட், ரமேஷ்நகர், வீரபத்ராநகர், ஜெகதீஷ்நகர், சிவசக்தி காலனி, தொட்டநெகுந்தி, மாரத்தஹள்ளி, நெல்லுார்புரம், ரெட்டிபாளையா, விபூதிபுரம், அன்னசந்திராபாளையா, எல்.பி.சாஸ்திரிநகர்.

மேலும், தாசரஹள்ளி, ஆர்.ஆர்.நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.