பஜாஜ் ஆட்டோ 2024 ஆம் ஆண்டிற்கான பல்சர் NS125 பைக்கில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் எல்இடி ஹெட்லைட் பெற்றதாக விற்பனைக்கு ரூ.1.13 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.5,500 வரை விலை உயர்ந்துள்ளது.
என்எஸ் 125 பைக்கில் 124.45 சிசி ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின் 8,500 ஆர்பிஎம்மில் 11.64 hp 8,500 ஆர்பிஎம்-யில் மற்றும் 11 Nm டார்க்கை வழங்குவதுடன் இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் இணைக்கப்பட்டு, 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் நைட்ராக்ஸ் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் 130 மிமீ டிரம் பிக்குடன் சிபிஎஸ் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்பிளிட் சீட், பெல்லி பேன், ஸ்டைலிங் பாடி கிராபிக்ஸ், பெட்ரோல் டேங்கில் ஷோர்ட்ஸ் போன்றவை கூடுதலாக பெற்றுள்ளது.
சமீபத்தில் வெளியான பல்சர் பைக்குகளில் இடம்பெற்றிருக்கின்ற டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது மொபைல் சிகனல், பேட்டரி இருப்பு, கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் வசதிகளும் உள்ளன. மிக முக்கியமான வசதிகளில் ஒன்றாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கொடுப்பதனால் வழி தெரியாத இடங்களிலும் இலகுவாக பயணிக்க உதவும்.
Model | Price |
2024 Bajaj Pulsar NS 125 | Rs 1.13 lakh |
2024 Bajaj Pulsar NS 160 | Rs 1.46 lakh |
2024 Bajaj Pulsar NS 200 | Rs 1.57 lakh |
(ex-showroom Tamilnadu)