புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கக்கூடிய மாத்திரையை மும்பையில் உள்ள இந்தியாவின் முதன்மையான புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையமான டாடா இன்ஸ்டிடியூட் கண்டுபிடித்துள்ளது. 10 ஆண்டு ஆராய்ச்சியின் பலனாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மாத்திரை நோயாளிகளுக்கு இரண்டாவது முறையாக புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி போன்ற சிகிச்சையின் பக்க விளைவுகளை 50 சதவீதம் குறைக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள் வெளியிட்டிருக்கும் தகவலில், “மனித புற்றுநோய் செல்களை எலிகளுக்குப் புகுத்தி […]