சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் இந்தியன் 2. முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி மாஸ் ஹிட்டை கொடுத்தது. இந்தப் படத்தில் சேனாபதி மற்றும் சந்த்ரூ என இருவேறு கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் கமல்ஹாசன்.