சென்னை திமுக எம் பி டி ஆர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழு தலைவருமான டி ஆர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுமுறைப் பயணமாகத் தமிழ்நாட்டுக்கு வந்து, அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, தாம் பிரதமர் என்பதையே மறந்து, அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்துவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவரது உரையைப் பார்த்தபோது, அவரை நினைத்துப் பரிதாபமாக இருந்தது. பதவி நாற்காலி காலியாகப் போகும் இறுதிக் […]