சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டத்தில், பழனியில் முருக பக்தர்கள் மாநாடு, நிதி வசதியில்லாத கோயில்கள் திருப்பணிக்கு நிதி, அர்ச்சகர்களுக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அறநிலையத் துறை ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு, அறநிலையத் துறை செயலர் க.மணிவாசன், அறநிலையத் துறையின் சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.