மாடர்ன் கெட்டப்புக்கு மாறிய ரட்சிதா மகாலட்சுமி
சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. அதன் பிறகு பல தொடர்களில் நடித்தவர், பிக்பாஸ் சீசன் -6 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். மேலும் சினிமாவில் உப்பு கருவாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ரட்சிதா, தற்போது, பயர், எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார். இதில் எக்ஸ்ட்ரீம் என்ற படத்தில் கதையின் நாயகியாக ஆக்ஷன் ரோலில் நடிக்கிறார். கிளாமர் கலந்த மாடர்ன் கெட்டப்புகளில் நடிப்பதற்கும் அவர் தயாராகி வருகிறார். அதை உறுதிப்படுத்தும் வகையில் மாடர்ன் உடையில் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார் ரட்சிதா.