மும்பை: மஹாராஷ்டிராவின் நவி மும்பையல், ‛இன்டெல்’ இந்தியாவின் முன்னாள் தலைவர் அவதான் சைனி (68), சாலை விபத்தில் உயிரிழந்தார்.
நேற்று அதிகாலை 5:50 மணியளவில் சைனி நண்பர்களுடன் பாம் பீச் சாலையில் சைக்களில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று, சைக்கிளின் பின்புறம் மோதியது. இதில், அவதார் சைனி சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டார். அதில் படுகாயம் அடைந்த அவதார் சைனியை நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பியோட முயன்ற வாகன டிரைவரை, அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவதார் சைனியின் மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அவரது மகன், மகள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement