வரும் மார்ச் 11 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் கிரெட்டா என்-லைன் எஸ்யூவி காரின் படங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூபாய் 25,000 வசூலிக்கப்படுகின்றது.
விற்பனையில் உள்ள டாப் 2024 ஹூண்டாய் கிரெட்டா வேரியண்ட்டை அடிப்படையாக கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டு 253 Nm டார்க் மற்றும் 160 hp பவரை வழங்குவதுடன் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற உள்ளது.
தோற்ற அமைப்பில் முன்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் சிவப்பு நிற இன்ஷர்ட்டுகள், N லைன் பேட்ஜிங் மற்றும் பெரிய 18 இன்ச் சக்கரங்கள், குறைந்த உயரமான வீல் ஆர்ச் வளைவுகளை மற்றும் பிரேக் காலிப்பர்களும் சிவப்பு நிறத்தில் உள்ளன. பின்புறத்தில், கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் ஸ்போர்டியர் பம்பர் உள்ளது. இன்டிரியரின் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கைகளின் தையல் நூல், கியர் செலக்டர், கதவு இன்ஷர்ட்டுகள் என பல்வேறு இடங்களில் சிவப்பு நிறத்தை கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.
கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 உள்ளிட்ட மாடல்களை ஹூண்டாய் கிரெட்டா N-line எதிர்கொள்ள உள்ளது.
The post ஹூண்டாய் கிரெட்டா N-line காரின் படங்கள் வெளியானது appeared first on Automobile Tamilan.