வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 3வது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) 8.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இரண்டாவது காலாண்டில், 7.6 சதவீத வளர்ச்சியைக் கண்டிருந்தது. தற்போது 2023-24 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இது இந்தியப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்ச்சியை காட்டுகிறது. கட்டுமானத்துறை, உற்பத்தித் துறையில் கண்டுள்ள வளர்ச்சி விகிதங்களே இதற்கு காரணம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “2023-24 மூன்றாம் காலாண்டில் பதிவாகியுள்ள 8.4 சதவீத ஜிடிபி வளர்ச்சி என்பது, இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையையும் அதன் திறனையும் காட்டுகிறது. 140 கோடி இந்தியர்கள் சிறந்த வாழ்க்கை வாழவும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கவும் உதவும் இவ்வாறு அவர் பதிவேற்றியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement