வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காசா: காசா பகுதியில் பாலஸ்தீனியர்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காசாவின் வடக்கு பகுதியில் உள்ள பாலஸ்தீனியர் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 104 பாலஸ்தீனியர்கள் பலியாயினர். 700-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement