'போச்சர்' வெப்சீரிஸ் பார்த்துவிட்டு பதறிய மகேஷ்பாபு

சமீபகாலமாக வெளியாகி வரும் வெப் சீரிஸ்களில் திரைப்படங்களில் சொல்ல முடியாத விஷயங்களை துணிச்சலாக கூறி வருகின்றனர். அதனால் வெப்சீரிஸ்கள் என்றாலே ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் அதை விரும்பி பார்க்க துவங்கியுள்ளனர். அப்படி சமீபத்தில் வெளியான போச்சர் என்கிற வெப்சீரிஸ் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் நடிகை ஆலியா பட் இதன் வெளியீட்டில் தன்னை இணைத்துக் கொண்டு போச்சர் குறித்த புரமோசன்களை செய்து வருகிறார்.

ரிச்சி மேத்தா என்பவர் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில் மலையாள திரை உலகைச் சேர்ந்த நடிகை நிமிஷா சஜயன் மற்றும் ரோஷன் மேத்யூ நடித்துள்ளனர். தந்தங்களுக்காக யானைகள் கொடூரமாக கொல்லப்படுவதையும் அதன் பின்னால் இருக்கும் அரசியலையும் மையப்படுத்தி இந்த வெப்சீரிஸ் உருவாகி உள்ளது. இந்த நிலையில் நடிகர் மகேஷ்பாபு இந்த வெப்சீரிஸை சமீபத்தில் பார்த்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவில், “எப்படி ஒருவரால் இப்படி செய்ய முடிகிறது? அவர்களது கைகள் நடுங்கவில்லையா? போச்சர் வெப்சீரிஸை பார்த்து முடித்ததும் இதுபோன்ற கேள்விகள் தான் என் மனதில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மேன்மை தாங்கிய இந்த உயிரினங்களை பாதுகாப்பதற்காக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.