போர் (தமிழ்) / டாங்கே (இந்தி)
பிஜாய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், டிஜே பானு, சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘போர்’. இரண்டு நெருங்கிய நண்பர்கள் எதிரெதிர் துருவங்களாக மாறி நிற்கின்றனர். இந்த இருவருக்கும் இடையேயான யுத்தத்தில் என்னெவெல்லாம் நடந்தது, அதில் குளிர் காய்பவர்கள் யார் என்பதுதான் இதன் கதைக்களம். ஆக்ஷன், திரில்லர் நிறைந்த இத்திரைப்படம் மார்ச் 1ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தியில் இந்தப் படம் ‘Dange’ என்ற பெயரில் வேறு சில நடிகர்களுடன் உருவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோஷ்வா ‘இமை போல் காக்க’ (தமிழ்)
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண், கிருஷ்ணா, ராஹி, திவ்யதர்ஷினி (DD) உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜோஷ்வா – இமை போல் காக்க’. கொலை கும்பலிடம் சிக்கித் தவிக்கும் கதாநாயகியைக் காப்பாற்ற ஆக்ஷனில் களமிறங்குகிறார் கதாநாயகன் ஜோஷ்வா. இந்தக் கொலை கும்பலின் பின்னணி என்ன, இந்த ஆக்ஷன் திரில்லர் நிறைந்த தோட்டாக்களின் விளையாட்டில் என்ன நடந்தது என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் மார்ச் 1ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சத்தமின்றி முத்தம் தா (தமிழ்)
ராஜ்தேவ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரிஷ் பேரடி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சத்தமின்றி முத்தம் தா’. ஸ்ரீகாந்த், தொடர்ந்து கொலைச் செயல்களில் ஈடுபடுகிறார். இதற்கான காரணம் என்ன என்பதுதான் இதன் கதைக்களம். சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த இத்திரைப்படம் மார்ச் 1ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அதோமுகம் (தமிழ்)
சுனி தேவ் இயக்கத்தில் எஸ். பி. சித்தார்த், சைதன்ய பிரதாப், சரித்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அதோமுகம்’. தன் மனைவியின் மற்றொரு முகத்தைக் கண்டு மிரளும் கணவன், தொடர்ந்து நடக்கும் க்ரைம் சம்பவங்களுக்கும், தன் மனைவிக்குமானத் தொடர்பை கண்டுபிடிக்கப் போராடுவதுதான் இதன் கதைக்களம். க்ரைம் திரில்லர் திரைப்படமான இது மார்ச் 1ம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது.
Operation Valentine (தெலுங்கு)
சக்தி பிரதாப் சிங் ஹடா இயக்கத்தில் வருண் தேஜ், மனுஷி சில்லர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Operation Valentine’. வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை எதிர்த்துப் போராடும் இந்திய விமானப் படை வீரர்களைப் பற்றிய கதை இது. இத்திரைப்படம் மார்ச் 1ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Bhoothaddam Bhaskar Narayana (தெலுங்கு)
புருஷோத்தம் ராஜ் இயக்கத்தில் சிவ கந்துகுரி, ராசி சிங் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bhoothaddam Bhaskar Narayana’. ஒரு பெரிய க்ரைமுக்குப் பின்னாலிருக்கும் மர்மத்தைக் கண்டுபிடிக்கப் கதாநாயகன் போராடுவதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் மார்ச் 1ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Chaari 111 (தெலுங்கு)
கீர்த்தி குமார் இயக்கத்தில் வெண்ணெலா கிஷோர், முரளி சர்மா, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் நடிப்பிப் உருவாகியுள்ள திரைப்படம் ‘Chaari 111’. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது மார்ச் 1ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Laapataa Ladies (இந்தி)
கிரண் ராவ் இயக்கத்தில் நிதான்ஷி கோயல், பிரதிபா ரனாதா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, ரவி கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Laapataa Ladies’. திருமணம் பிடிக்காமல் தப்பிச் சென்ற இரண்டு மணப்பெண்களைத் தேடும் நகைச்சுவை நிறைந்த கதை இது. இத்திரைப்படம் மார்ச் 1ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Kaagaz 2 (இந்தி)
வி.கே.பிரகாஷ் இயக்கத்தில் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், தர்ஷன் குமார், நீனா குப்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Kaagaz 2’. போராட்டங்கள் மற்றும் பேரணிகள் சாமானிய மனிதர்களின் வாழ்வில் எப்படியெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றியது இதன் கதைக்களம். இத்திரைப்படம் மார்ச் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
The Zone of Interest (ஆங்கிலம்)
ஜொனாதன் கிளேசர் இயக்கத்தில் கிறிஸ்டியன் ஃப்ரீடெல், சாண்ட்ரா ஹல்சர், ஜோஹன் கார்தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Zone of Interest’. ராணுவத்தில் பணிபுரியும் ஆஷ்விட்ஸ் கமாண்டன்ட் ருடால்ஃப் ஹோஸ் மற்றும் அவரது மனைவி ஹெட்விக் இருவரும் இணைந்து போர் நடக்கும் ராணுவ முகாமுக்கு அருகில் வீடு, தோட்டத்தை உருவாக்கி தாங்கள் விரும்பும் ஒரு கனவு வாழ்க்கையை வாழ முயல்வதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் மார்ச் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
May December (ஆங்கிலம்)
டாட் ஹெய்ன்ஸ் இயக்கதில் நடாலி போர்ட்மேன், கிறிஸ் டென்சிஸ், சார்லஸ் மெல்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘May December’. இத்திரைப்படம் மார்ச் 1ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Dune: Part Two
டெனி வில்நௌ இயக்கத்தில் திமோதி சாலமேட், ஜெண்டயா, ரெபேக்கா பெர்குசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Dune: Part Two’. ஏற்கெனவே முதல் பாகம் வெளியாகி உலக அளவில் கவனம் ஈர்த்த நிலையில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இரண்டாம் பாகம் தயாராகியிருக்கிறது. ஆக்ஷன், அட்வன்சர் திரைப்படமான இது, இந்தியாவில் பிப்ரவரி 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்
Code 8: Part II (ஆங்கிலம்)
ஜெஃப் சான் இயக்கத்தில் ராபி அமெல், ஸ்டீபன் அமெல், அலெக்ஸ் மல்லாரி ஜூனியர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Code 8: Part II’. ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
My Name is Loh Kiwan (கொரியன்)
கிம் ஹீ ஜின் இயக்கத்தில் சாங் ஜாங்-கி, ஜோ ஹான்-சுல், கிம் சாங்-ரியுங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘My Name is Loh Kiwan’. வட கொரியாவிலிருந்து பெல்ஜியத்திற்குச் செல்லப் போராடுகிறார் கதாநாயகன். அதற்கு அகதியாகத் தன்னை அரசு அங்கீகரிக்க வேண்டும். இதைப் பெற போராடும் கதாநாயகனின் வாழ்வு, அவர் சந்திக்கும் ஒரு பெண்ணால் முற்றிலும் மாறுவதுதான் இதன் கதைக்களம். காதல் திரைப்படமான இது மார்ச் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Spaceman (ஆங்கிலம்)
ஜோஹன் ரென்க் இயக்கத்தில் ஆடம் சாண்ட்லர், கேரி முல்லிகன், பால் டானோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Spaceman’. சயின்ஸ் பிக்ஷன், திரில்லர் திரைப்படமான இது மார்ச் 1ம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வார வெப்சீரிஸ்
Maamla Legal Hai (இந்தி)
ராகுல் பாண்டே இயக்கத்தில் விக்ரம் பிரதாப், அமித் விக்ரம் பாண்டே, ராம சர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Maamla Legal Hai’. காமெடியான கோர்ட் ட்ராமா வெப்சீரிஸான இது மார்ச் 1ம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
SHOGUN (ஆங்கிலம்) – Disney+ Hotstar
ஃபிரடெரிக் இ.ஓ. டோய், ஜொனாதன் வான் டல்லெகன் உள்ளிட்ட பலரின் இயக்கத்தில் ஹிரோயுகி சனாடா, காஸ்மோ ஜார்விஸ், அன்னா சவாய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘SHOGUN’. ஆக்ஷன், அட்வன்சர் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Iwaju (ஆங்கிலம்) – Disney+ Hotstar
ஜிக்கி நெல்சன் இயக்கத்தில் சிமிசோலா கபடமோசி, தயோ ஓகேனி, ஃபெமி ப்ரான்ச் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Iwaju’. அட்வன்சர், அனிமேஷன் வெப்சீரிஸான இது ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The Impossible Heir (ஆங்கிலம்) – Disney + Hotstar
மின் யோன்-ஹாங், லீ ஹியாங்-பாங் இயக்கத்தில் லீ ஜே-வூக், லீ ஜூன்-யங், ஹாங் சுஸு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கொரிய மொழி வெப்சீரிஸ் ‘The Impossible Heir’. இந்த வெப்சீரிஸ் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தியேட்டர் டு ஓடிடி
ப்ளூ ஸ்டார் (தமிழ்) – Amazon Prime Video
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ப்ளூ ஸ்டார்’. அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை வாழ்க்கையாகக் கருதும் இரு அணிகள் வழியாக சமூக அரசியல் பேசுகிறது இப்படம். காதல், சமூகம், கிரிக்கெட், அரசியல் என கமர்சியல் பேக்கேஜ்கள் நிறைந்த இப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
My Name is Shruti (தெலுங்கு) – Aha
ஸ்ரீனிவாச ஓம்கார் இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி, தர்பா அப்பாஜி அம்பரிஷா, முரளி சர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘My Name is Shruti’. திரில்லர் திரைப்படமான இது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Bootcut Balaraju (தெலுங்கு) – Aha
ஸ்ரீனிவாஸ் கொணிடி இயக்கத்தில் கோபால் கிருஷ்ணா அகேல்யா, தர்பா அப்பாஜி அம்பரீஷ், அவினாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bootcut Balaraju’. காமெடி திரைப்படமான இது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Ambajipeta Marriage Band (தெலுங்கு) – Aha
துஷ்யந்த் கடிகினேனி இயக்கத்தில் சுஹாஸ், ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி, நிதின் பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Ambajipeta Marriage Band’. இரண்டு பெண்களைச் சுற்றி நடக்கும் எமோஷனல் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Napoleon (ஆங்கிலம்) – Apple Tv +
ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் வகீன் பீனிக்ஸ், வனேசா கிர்பி, தஹர் ரஹீம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Napoleon’. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ‘Apple Tv +’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Eagle/Sahadev (தெலுங்கு/இந்தி) – ETv Win
கார்த்திக் காட்டம்நேனி இயக்கத்தில் ரவி தேஜா, அனுபமா பரமேஸ்வரன், நவ்தீப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Eagle’. (இந்தியில் ‘Sahadev’) ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது தெலுங்கு, இந்தி மொழிகளில் ‘ETv Win’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Priscilla (ஆங்கிலம்) – MUBI
சோபியா கொப்போலா இயக்கத்தில் கெய்லி ஸ்பேனி, ஜேக்கப் எலோர்டி, அரி கோஹன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Priscilla’. இத்திரைப்படம் ‘MUBI’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.