புனித ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது

புனித ரமழானை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கான இறக்குமதி வரி எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழத்திற்கு, நாட்டில் தற்போது ஒரு கிலோகிராமுக்கு அறவிடப்படும் 200 ரூபா விசேட வர்த்தக வரி 1 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த நிவாரணத்தைப் பெறுவதற்கு சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.