பெங்களூரூ: கர்நாடக மாநிலம் பெங்களூரூ அருகே இந்திரா நகரில் உள்ள ஓட்டலில் மர்ம பொருள் வெடித்ததில் 8 பேர் காயமுற்றனர். 3 பேரிடம் விசாரணை நடக்கிறது.
இந்திரா நகரில் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. வெடித்தது வெடிகுண்டா அல்லது சிலிண்டரா, மர்ம பொருள் ஏதும் வெடித்ததா, வெடிகுண்டு ஏதும் வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் போலீசார், தீயணைக்கும் படையினர் குவிந்துள்ளனர். இந்த வெடி விபத்தில் ஓட்டல் ஊழியர்கள் 3 பேர், வாடிக்கையாளர் ஒருவர் என 4 பேர் காயமுற்றனர்.
3 பேரிடம் விசாரணை
இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement