வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை :உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள், இதுவரை 97.62 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும்; இன்னும் 8,470 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
கடந்தாண்டு மே 19ம் தேதி, ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அறிவித்தபோது புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3.56 லட்சம் கோடி ரூபாய். இது, கடந்த பிப்., 29ம் தேதியன்று 8,470 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில், 97.62 சதவீதம் திரும்பப்பெறப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement