சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பாஜக சீன மொழியில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடினார். முதல்வருக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தன. அவருக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் வாழ்த்து தெரிவித்திருந்தார். தமிழக பா.ஜ.க. தங்களின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’சமூக வலைத்தளத்தில் சீனாவின் மாண்டரின் மொழியில் […]