சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வரும் நிறுவனம் இது. அந்த வகையில் தற்போது இந்நிறுவனம் ‘இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ்’ ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பட்ஜெட் விலை என்றாலும் அசத்தல் அம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.6 இன்ச் டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன்
- மீடியாடெக் ஹீலியோ ஜி36 சிப்செட்
- 4ஜிபி ரேம்
- 64ஜிபி ஸ்டோரேஜ் / 128ஜிபி ஸ்டோரேஜ்
- 50 மெகாபிக்சல் ட்யூயல் ஏஐ கேமரா பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 6,000mAh பேட்டரி
- 18 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதி
- டைப்-சி யுஎஸ்பி போர்ட்
- 4ஜி நெட்வொர்க்
- ட்யூயல் நேனோ சிம்
- மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- இதன் விலை ரூ.6,999