நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நாளை தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கோவை, பொள்ளாச்சி இரண்டு தொகுதிகள் உள்ளன. இங்கு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன.
இதனால் களம் இப்போதே அனல் பறக்கிறது. அடுத்தடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் விசிட் அடித்து கொண்டிருக்கின்றனர்.
கோவை மக்களவைத் தொகுதி:
பாஜக-வில் கோவை வேட்பாளராக மாநிலத் தலைவர் அண்ணாமலை களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அங்கு திமுக-வே நேரடியாக போட்டியிட உள்ளது என்கிறார்கள். அதேபோல வானதி சீனிவாசனும் கோவைக்கு தீவிரமாக முயற்சி செய்கிறார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது. எனினும் தமிழ்நாட்டில் இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இழக்க விரும்பாத பாஜக தலைமை, அண்ணாமலையை களமிறக்கலாம் எனக் கூறப்படுகிறது.
திமுக-வில் மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக், மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் டாக்டர் கோகுல், ஐ.டி விங் மாநில இணைச் செயலாளர் டாக்டர். மகேந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.
அண்ணாமலையை எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக சிறப்பு வியூகங்களை வகுத்து வருகிறது. அண்ணாமலை ஏற்கெனவே 2021 சட்டசபை தேர்தலில் கரூர் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதனால் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் திமுக தலைமை கோவை தொகுதி குறித்து ஆலோசனையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அவரது ஆலோசனை அடிப்படையில் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி மகன் அசோக்பாபு உள்ளிட்ட புதுமுக வேட்பாளரை டிக் அடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கோவை தொகுதிக்கு திமுக எடுக்கும் முடிவு மிகவும் சர்ப்ரைஸாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதிமுக-வில் கோவை தொகுதிக்கு ஐ.டி விங் மண்டல செயலாளர் விக்னேஷ் பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி!
பொள்ளாச்சி தொகுதியில் திமுக சிட்டிங் எம்.பி சண்முகசுந்தரம், முன்னாள் நகரச்செயலாளர் டாக்டர் வரதராஜன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. இதில் சண்முகசுந்தரத்துக்கு சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் பொள்ளாச்சி தொகுதிக்கு செய்தித்தொடர்பாளர் கல்யாணசுந்தரம், தொண்டாமுத்தூர் ஒன்றிய கவுன்சிலர் மதுமதி மகன் நிஷ்கலன் பெயர்கள் ரேஸில் உள்ளன.
பாஜக-வில் பொதுச்செயலாளர் முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் பெயர் அடிபட்ட நிலையில், முருகானந்தத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.! எல்லாம் ஓரிருநாளில் தெரிந்து விடும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY