இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ வெளியிட உள்ள உலகின் முதல் ப்ரூஸர் (Bruzer CNG) சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷனில் எதிர்பார்க்கப்படுகின்றது.
மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷனை பெற உள்ள சிஎன்ஜி ப்ரூஸர் 115சிசி முதல் 150சிசி வரை வரக்கூடும் அல்லது 102சிசி முதல் 125சிசி வரை உள்ள எஞ்சின்களை பயன்படுத்தி வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
துவக்க நிலை தினசரி பயன்பாடிற்கு ஏற்ற கம்யூட்டர் பிரிவில் வரவுள்ள மோட்டார்சைக்கிளில் சிஎன்ஜி எரிபொருளுக்கான டேங்கை மிக நேர்த்தியாக இருக்கைக்கு மற்றும் பெட்ரோல் டேங்கிற்கு அடிப்பகுதியில் பொருத்தியிருக்கின்றது. எனவே, எவ்விதமான இடவசதி பாதிப்புகளும் இல்லாமலும், மிகவும் அடக்கமாகவும் வடிவமைத்துள்ளதால் பெரிதாக தோற்ற அமைப்பில் வித்தியாசப்படுவதற்கு வாய்ப்பில்லை.
சிஎன்ஜி எரிபொருள் டேங்கின் கொள்ளளவு பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.
சோதனை ஓட்டத்தில் உள்ள சிஎன்ஜி மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லைட் கொண்டுள்ள மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது. முன்பாக சிக்கிய படங்களில் பின்பக்கத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் பெற்றிருந்தது. எனவே, இந்த மாடல் 125சிசி அல்லது 150சிசி ஆக இருக்கலாம். முன்புறத்தில் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் ஆப்ஷனும் உள்ள நிலையில், டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆனது பெற்றுள்ளது.
முன்பே இந்நிறுவன தலைவர் குறிப்பிட்டபடி, அடுத்த சில மாதங்களுக்குள் சந்தைக்கு வரவிருக்கின்ற பஜாஜ் ப்ரூஸர் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள்கள் லிட்டருக்கு 100 கிமீ மைலேஜ் வெளிப்படுத்தலாம்.