இந்தியாவில் நிசான் விற்பனை செய்து வருகின்ற ஒரே மாடலான மேக்னைட் எஸ்யூவி காரின் சோதனை ஓட்டத்தை துவங்கியுள்ளதால் அடுத்த 4 முதல் 8 மாதங்களுக்குள் சந்தைக்கு வர வாய்ப்புள்ளது.
4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மேக்னைட் மேம்படுத்துவதனால் கிகர் எஸ்யூவி மாடலை மேம்படுத்தி விற்பனைக்கு ரெனால்ட் வெளியிட உள்ளது. இரு மாடல்களும் ஒரே பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்ளுகின்றன.
2024 Nissan Magnite
ஒட்டுமொத்த அடிப்படையான கட்டுமானத்தில் பெரிதாக மாற்றமில்லாமல் சில பாதுகாப்பு மேம்பாடுகளுடன் ஏர்பேக்குகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. சோதனை ஓட்டத்தில் உள்ள மாடல் முழுமையாக மறைக்கப்பட்டுள்ள நிலையில் தோற்ற அமைப்பில் முன்பக்க பம்பர் கிரிலில் பெரிய மாற்றங்கள் இருப்பதுடன் அலாய் வீல் மற்றும் பின்புற பம்பர் டெயில் லைட் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது.
எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து, 1.0 லிட்டர் B4D NA பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கும் மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஏஎம்டி அல்லது EZ-Shift கியர்பாக்ஸ் உள்ளது.
அடுத்து, 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இருக்கும்.
இந்தியாவில் விற்பனையில் கிடைக்கின்ற ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் விலைக்குள் உள்ள காம்பேக்ட் எஸ்யூவிகளுக்கு மிகுந்த சவாலாக விளங்குகின்றது.
image source – instagram / we guide auto