நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன. திமுக தொகுதிப் பங்கீடு முடித்து வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர்களையும் அறிவித்திருக்கிறார். இதற்கிடையில், பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இணைந்த பா.ம.க-வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. டி.டி.வி தினகரனின் அ.மு.மு.க கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது,“தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டின் 39 தொகுதிகளின் பங்கீடை முடித்திருக்கிறோம். தமிழ்நாட்டில் பா.ஜ.க 20 தொகுதிகளிலும், 4 தொகுதிகளில் பா.ஜ.க சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. 24 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலோடு டெல்லி செல்லவிருக்கிறோம். இன்று மாலைக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும், யார் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்பது தொடர்பான முழுத் தகவலை எதிர்பார்க்கலாம்.
கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை அவர்கள் அறிவிப்பார்கள். சுமூகமாக, திருப்தியாக இந்தத் தொகுதிப் பங்கீடு முடிந்திருக்கிறது. தமிழ் மாநில காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒ.பி.எஸ் விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவார். அவர் நல்ல முடிவெடுத்திருக்கிறார். அவரே மற்ற தகவல்களை தெரிவிப்பார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கிடையில், பா.ஜ.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுவிட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளதால், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் போட்டியிட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஓ.பி.எஸ் அணியினர் தற்போது அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY