ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் காட்சிப்படுத்தியுள்ள ID.4 எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடல் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக நடப்பு ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
2024 Volkswagen ID.4
சர்வதேச அளவில் கிடைக்கின்ற ID.4 மாடலில் ஒற்றை மோட்டார் பெற்ற வேரியண்ட் 58 kWh மற்றும் டூயல் மோட்டார் பெற்ற 77 kWh வேரியண்ட் என இருவிதமாக கிடைக்கின்றது.
பல்வேறு மாறுபட்ட வேரியண்டுகள் விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில், இந்திய சந்தைக்கு வரவுள்ள மாடலின் உறுதியான வேரியண்ட் மற்றும் ரேஞ்ச் தொடர்பாக எந்த உறுதியான தகவலும் இல்லை.
480 கிமீ ரேஞ்ச் வழங்குகின்ற 77 kWh பேட்டரி பேக் பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக 299PS மற்றும் 310Nm டார்க் வழங்குகின்றது.
இந்திய சந்தையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள இந்திய சந்தைக்கான ஃபோக்ஸ்வேகனின் முதல் ID.4 எலக்ட்ரிக் காரின் விலை ரூ.50 லட்சத்துக்கும் கூடுதலாக 2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் வரக்கூடும்.
கூடுதலாக இன்றைக்கு ஃபோக்ஸ்வேகன் டைகனில் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் மற்றும் ஜிடி லைன் என இரு வேரியண்டுகளை வெளியிட்டுள்ளது.