உலகின் முதல் சிஎன்ஜி பைக்கினை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஜூன் மாதம் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக இந்நிறுவன தலைவர் ராஜீவ் பஜாஜ் உறுதிப்படுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பாக சி.என்.ஜி பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியான நிலையில் தற்பொழுது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
Bajaj CNG
பெட்ரோல் பைக்குகளை விட கூடுதல் மைலேஜ் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவுகின்ற சிஎன்ஜி எரிபொருள் பெட்ரோலை விட விலை மலிவானதாக கிடைப்பதனால் மிகப்பெரிய மாற்றத்தை இந்த மோட்டார்சைக்கிள் தரும் என பஜாஜ் நம்புகின்றது.
100 சிசி சிஎன்ஜி பைக் என ஆரம்பத்தில் கூறப்பட்ட வந்த நிலையில் தற்பொழுது கிடைத்த சில தகவல்களின் படி 100-150சிசி வரையில் உள்ள பிரிவுகளில் மாறுபட்ட செயல்திறன் மற்றும் ஸ்டைல்களை கொண்டதாக அமைந்திருக்கலாம்.
சமீபத்தில் வெளியான சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட மாடல் ஒன்று எல்இடி ஹெட்லைட் கொண்டுள்ள மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது. முன்பாக சிக்கிய படங்களில் பின்பக்கத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் பெற்றிருந்தது.
சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ Glider, Marathon, Trekker, மற்றும் Freedom என்ற பெயர்களை காப்புரிமை கோரி பதிவு செய்துள்ளது. இது தவிர Bruzer என்ற பெயரும் குறிப்பிடப்படுகின்றது. எனவே, பஜாஜ் சிஎன்ஜி பைக் ஜூன் மாதம் ரூ.1 லட்சம் விலையில் வெளியிடப்படலாம்.
உதவி – ET Now