பிஎஸ்என்எல் 499 ரூபாய் பைபர் திட்டத்தால் மார்க்கெட்டே அதிருது! லோக்கல் அழைப்புகள் இலவசம்

பைபர் திட்டங்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் விதமாக பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் சூப்பரான பிளான்களை வைத்திருக்கிறது. 499 ரூபாய் முதல் 799 ரூபாய் வரை என நான்கு பிளான்களில் இருக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ்கால், டேட்டா உள்ளிட்ட அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்திருக்கின்றன. இந்த நான்கு திட்டங்களிலும் இருக்கும் சிறப்பம்சங்கள் என்னென்ன இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் 499 ரூபாய் பைபர் பிளான்

பைபர் திட்டங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் (BSNL Bharat Fibre Plan) வைத்திருக்கும் பேஸிக் பிளான் இதுவாகும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 3300 ஜிபி டேட்டா கிடைக்கும்.  30 எம்பிபிஎஸ் வேகத்தில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதவிர உள்ளூர் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இந்த வேகம் எனக்கு பத்தாது, இதைவிட கூடுதல் வேகம் இருக்கும் பைபர் கனெக்ஷன் வேண்டும் என்றால் 599 ரூபாய் பிளானை வைத்திருக்கிறது பிஎஸ்என்எல்.

பிஎஸ்என்எல் 599 ரூபாய் பைபர் பிளான்

இந்த திட்டத்திலும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 3300 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 60 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கிடைக்கும். உங்களுக்கான டேட்டா வரம்பு தீர்ந்துவிடும் பட்சத்தில் 4 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை உபயோகிக்கலாம். அதேபோல லேண்ட் லைன் மூலம் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 

பிஎஸ்என்எல் 699 ரூபாய் பைபர் பிளான்

ஓடிடி சலுகைகளை எதிர்பார்ப்பவர்களுக்கு பிஎஸ்என்எல் 699 ரூபாய் பைபர் பிளான் சரியாக இருக்கும். இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 60 எம்பிபிஎஸ் வேகத்தில் அதிகபட்சமாக 3300 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டங்களை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கிறது. இதுபோக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ஓடிடி தளத்தில் சந்தா உள்ளது.

பிஎஸ்என்எல் 799 ரூபாய் பைபர் பிளான்

பிஎஸ்என்எல் ரூ 799 ஃபைபர் திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா மட்டுமல்லாமல், சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (Zee5), யூப்டிவி (YuppTV) ஆகிய தளங்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த டேட்டாவுக்கு பிறகு 5 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா வேகம் குறைக்கப்படும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி லேண்ட்லைன் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். மேலே சொன்ன அனைத்து திட்டங்களுக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.