வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் தற்போது அமுல்படுத்தப்படும் நெடுஞ்சாலைகள் சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் இற்கு ஒப்படைத்தல்

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் தற்போது அமுல்படுத்தப்படும் நெடுஞ்சாலைகள் சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் இற்கு ஒப்படைப்பதற்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் என்ற வகையில் தான்; சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு…

நெடுஞ்சாலைகள் வலைப்பின்னல், நெடுஞ்சாலைகளுக்குச் சொந்தமான காணிகள், நெடுஞ்சாலைகளுக்கான கடன்கள் (உள்நாட்டு) மற்றும் ஏற்புடைய பணிக்குழாமினரை மிகவும் வணிக ரீதியாக முகாமைத்துவம் செய்வதற்கு இயலுமாகும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிலிருந்து வேறாக்கி சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் இற்கு வழங்குவதற்காக 2023.06.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் அதற்கான செயற்பாட்டுத் திட்டத்திற்காக 2024.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நெடுஞ்சாலைகளின் நாளாந்த நடவடிக்கைகள் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள் 2024.04.01 தொடக்கம் முறைசார்ந்த முகாமைத்துவ ஒப்பந்தத்தின் கீழ் சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் இற்கு ஒப்படைப்பதற்கும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் கூட்டாக மேற்கொள்கின்ற சட்டம் மற்றும் நிதி ரீதியான சாத்தியவளக் கற்கையின் பின்னர் குறித்த அனைத்துச் சொத்துக்களும் 06 மாதகாலத்தில் சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் இற்கு ஒப்படைப்பதற்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.