CSK vs GT: சிக்ஸர் துபே அதிரடியில் குஜராத்தை வெற்றி பெற்ற சென்னை அணி!

சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. ஐபிஎல் 2024ன் ஏழாவது போட்டியான இது ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பில் இருந்தது, காரணம் இந்த இரண்டு அணிகளும் கடைசியாக ஐபிஎல் 2023 பைனலில் விளையாடியிருந்தது. அப்போது குஜராத் அணியை தோற்கடித்து சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது.  மேலும் இந்திய அணியின் இரண்டு ஓப்புனர்களாக இருக்கும் ருத்ராஜ் கெய்குவாட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இரண்டு அணிகளுக்கும் கேப்டனாக உள்ளனர். இவர்கள் இருவர்களுக்கு இடையே மோதல் எப்படி இருக்கும் என்று பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் யாரும் எதிர்பார்க்காத விதமாக தீக்ஷனா பெஞ்ச் செய்யப்பட்டு பத்திரானா அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.  சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் முதல் போட்டியை போல அதிரடியான துவக்கம் கொடுத்தனர். ரச்சின் ரவீந்தரா நாளா புறமும் பவுண்டரி மற்றும் சிங்களர்களை பரக்க விட்டார். ஒருபுறம் ருத்ராஜ் நிதானமாக விளையாட மறுபுறம் ரச்சின் பவர் பிளேயரில் ரன்களை குவித்து கொண்டிருந்தார்.  இருவரும் தலா 46 ரன்கள் அடித்து அவுட் ஆகினர். ரகானே 12 ரன்களில் வெளியேற அடுத்து இறங்கிய சிவம் துபே முதல் பந்து முதலே சிக்சர் மழையை பொழிய தொடங்கினார்.  ரஷித் கான், சாய் சுதர்சன் என யாரையும் விட்டு வைக்காமல் சிக்சர் அடித்தார் துபே. 

This  hits home!

First half century at Anbuden for Dube! #CSKvGT #WhistlePodu #Yellove pic.twitter.com/HufOYYbYYS

— Chennai Super Kings (@ChennaiIPL) March 26, 2024

வெறும் 23 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உட்பட 53 ரன்கள் அடித்து வெளியேறினார் சிவம் துபே.  கடைசி இரண்டு ஓவர்கள் இருக்கும் நிலையில் களம் இறங்கிய அறிமுக வீரர் சமீர் ரிஸ்வி ரஷித் கானின் முதல் பந்திலையே சிக்சருடன் தனது ஐபிஎல் வாழ்க்கை துவங்கினார்.  அதிரடியாக ஆடிய சமீர் ரிஸ்வி 6 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 14 ரன்கள் விலாசினார்.  இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.  குஜராத் அணி தரப்பில் ரஷீத் கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

207 ரன்கள் என்ற பெரிய இலக்கை எதிர்த்து ஆடிய குஜராத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. கேப்டன் சுப்மன் கில் 8 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். மறுபுறம் சஹா 21 ரன்களுக்கும், விஜய் சங்கர் 12 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினர். சிறிது நேரம் பாட்னர்ஷிப் போட்ட சாய் சுதர்சன் மற்றும் டேவிட் மில்லர் நிதானமாக ஆடி ரன்களை அடித்தனர்.  சாய் சுதர்சன் 37 ரன்களுக்கும், மில்லர் 21 ரன்களுக்கும் அவுட் ஆகி வெளியேற அங்கேயே ஆட்டம் முடிந்தது.  20 ஓவர் முடிவில் குஜராத் அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்து இந்த போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.  சென்னை அணி விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.