சிட்ரோன் இந்தியா வெளியிட உள்ள பாசால்ட் (Basalt) விஷன் கூபே ஸ்டைல் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.
C-cubed திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பாசால்ட் கூபே காரின் எஞ்சின் மற்றும் இண்டிரியரில் உள்ள வசதிகள் தொடர்பான விபரங்களை தற்பொழுது அறிவிக்கவில்லை.
- பாசால்ட் டிசைன்: கூபே ரக ஸ்டைலை பெற்றுள்ள இந்த காரின் முன்பக்க தோற்ற அமைப்பு விற்பனையில் உள்ள C3 ஏர்கிராஸ் காரை போலவே அமைந்திருக்கின்றது.
- விலை அறிவிப்பு : விலை ரூ.12 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற பாசால்ட்டின் விலை ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகலாம்.
Citroen Basalt
எஞ்சின் தொடர்பான விபரங்களை தற்பொழுது அறிவிக்கவில்லை என்றால் இந்தியாவில் கிடைக்கின்ற மற்ற மாடல்களில் உள்ள 110 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் வரவுள்ள மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் என இரண்டு விதமான ஆப்ஷனையும் பெறலாம்.
தோற்ற அமைப்பில் முன்பக்க கிரில் மற்றும் ரன்னிஙு விளக்குடன் கூடிய எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் கொடுக்கப்பட்டு சி3 ஏர்கிராஸ் மாடலை நினைவுப்படுத்துகின்றது. ஆனால் ஹாலஜென் விளக்குகளுக்கு பதிலாக சதுர வடிவ புராஜெக்டர் எல்இடி விளக்கிகளாக உள்ளது.
மற்றபடி, பக்கவாட்டில் உயரமான வீல் ஆர்ச், கன் மெட்டல் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல் பெற்றதாக அமைந்துள்ளது. மேலும் பின்பக்கத்தில் கூபே ரக ஸ்டைலிங் அம்சத்தை பெற்று எல்இடி டெயில் லேம்ப் கொண்டுள்ளது.
இன்டிரியர் தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை என்றாலும் விற்பனையில் கிடைக்கின்ற சி3 ஏர்கிராசில் இருந்து பெறப்பட்ட இன்டிரியருடன் வயர்லெஸ் சார்ஜிங், கீலெஸ் என்ட்ரி, கனெக்ட்டிவிட்டி வசதிகள் பெற்ற 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள் பெறக்கூடும்.
புதிதாக வரவுள்ள டாடா கர்வ் மாடலை எதிர்கொள்ள உள்ள சிட்ரோன் பாசால்ட் எஸ்யூவி விற்பனைக்கு ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியிடப்படலாம்.