ஓடிடியில் வெளியானது : ஆங்கிலேயர்களுக்கு எதிராக ரகசிய வானொலி நடத்திய உஷா மேத்தாவின் கதை
இந்திய சுதந்திர போராட்டம் என்றாலே நம் நினைவுக்கு வருவது உப்பு சத்யாகிரகம், வெள்ளையனே வெளியேறு போராட்டம், வீரபாண்டிய கட்டபொம்மன், ஜான்சி ராணி, காந்தி இப்படித்தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பல போராட்ட வடிவங்களை கொண்டிருந்தது சுந்திர யுத்தம்.
அவற்றில் ஒன்றுதான் ஆங்கிலேயர்கள் கண்ணில் விரல் விட்டு ஆட்டி ரகசிய வானொலி நடத்தி தலைவர்களின் வீரமிக்க உரைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த வீரப் பெண்மணி உஷா மேத்தாவின் கதை. அதிகம் அறியப்படாத உஷா மேத்தாவின் வரலாறு தற்போது ஹிந்தியில் திரைப்படமாக தயாராகி நேரடியாக ஓடிடியில் வெளியாகி உள்ளது. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பார்க்கலாம்.
'ஏ வதன் மேரே வதன்' என்ற பெயரில் உருவாகி உள்ள இந்த படத்தில் உஷா மேத்தாவாக சாரா அலிகான் நடித்துள்ளார். இம்ரான் ஹாஸ்மி, ஆனந்த் திவாரி, அபய் வர்மா எனப் பலர் நடித்துள்ளனர். கரண் ஜோஹர் தயாரித்த இந்த திரைப்படத்தை கண்ணன் ஐயர் இயக்கி இருக்கிறார். ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.