ரெனால்ட்-நிசான் இந்தியா கூட்டு நிறுவனத்தின் சார்பாக 5 இருக்கை மற்றும் 7 இருக்கை எஸ்யூவி என இரண்டும் இரு நிறுவனங்களின் சார்பாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதை உறுதிப்படுத்தி டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
ரெனால்ட் டஸ்ட்டர் 5 இருக்கை எஸ்யூவி மற்றும் 7 இருக்கை எஸ்யூவி, நிசான் சார்பாக 5 இருக்கை மற்றும் 7 இருக்கை எஸ்யூவி என இரண்டும் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது.
Renault Duster, Nissan SUV
- CMF-B பிளாட்ஃபாரம் : உள்நாட்டிலே பெரும்பாலான உதிரிபாகங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த இரு நிறுவனங்களும் டிசைன் அமைப்பில் முக்கிய வேறுபாடுகளை வழங்க உள்ளது.
- ரெனால்ட் டஸ்ட்டர் : சில மாதங்களுக்கு முன்பாக சர்வதேச சந்தையில் டஸ்ட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- நிசான் எஸ்யூவி : டெரோனோ என முன்பாக பயன்படுத்தப்பட்ட பெயர் இடம்பெறுமா அல்லது புதிய பெயரில் நிசான் எஸ்யூவி 5 இருக்கை மாடல் வருமா என்பது குறித்தான தகவல் தற்பொழுது இல்லை.
ஏற்கனவே, டேசியா பிராண்டிலும் ரெனால்டிலும் டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதே வடிவத்தை உறுதிப்படுத்தும் வகையில் டீசர் அமைந்துள்ளது.
நிசான் வெளியிட்டுள்ள டீசரில் எல்இடி லைட் பாருடன் L- வடிவ எல்இடி ஹெட்லைட் பெற்று மிக நேர்த்தியான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் டீசர் வெளியாகியுள்ளது. மேலும், 7 இருக்கை எஸ்யூவி மாடலை இரு நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளது.
Renault-Nissan
25 ஆண்டுகளாக ரெனால்ட்-நிசான் செயல்பட்டு வருகின்ற கூட்டு முயற்சியில் (RNTBCI – Renault Nissan Technology Business Centre India) கூட்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனம் இந்திய தயாரிப்புகள் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களுக்கும் மேம்பாடுகளை வழங்கி வருகின்றது.
குறிப்பாக, ரெனால்ட் 5, Renault Scenic, ரெனால்ட் ஸ்பிரிங், நிசான் X-Trail, மற்றும் நிசான் லீஃப் உள்ளிட்ட மாடல்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.