ஃபோர்ஸ் நிறுவன ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக விளங்குகின்ற கூர்க்கா 3 கதவுகளை பெற்ற மாடலை விட கூடுதல் இடவசதி பெற்ற 5 கதவுகளை பெற்ற எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்வதனை உறுதிப்படுத்துகின்ற டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
மிக சிறப்பான ஆஃப் ரோடு பயனங்களுக்கு ஏற்றதாக உள்ள கூர்க்கா காரில் 4 இருக்கை பெற்று மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவன 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 91 hp பவர் மற்றும் 251 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் 4X4 வசதியும் உள்ளது.
Force Gurkha 5-door SUV
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற கூர்க்கா 5 கதவுகளை பெற்ற மாடலில் தற்பொழுதுள்ள 2.6 லிட்டர் எஞ்சின் தக்கவைத்துக் கொள்ள வாயுப்புள்ளது.
மற்றபடி, 4 இருக்கைக்கு பதிலாக 5, 6 மற்றும் அதிகபட்சமாக 7 இருக்கை வரை வழங்கப்படுவதுடன் மிக தாராளமான இடவசதியை கொண்டிருப்பதுடன் வீல்பேஸ் 2,825 மிமீ ஆக இருக்கலாம்.
சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வந்த மாடல் தோற்ற அமைப்பில் விற்பனையில் உள்ள மாடலை போலவே அமைந்திருந்த நிலையில் விற்பனைக்கு வரும்பொழுது மாறுபட்ட சில ஸ்டைலிங் அம்சங்களை கொண்டிருக்கலாம்.
அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள தேதி அறிவிக்கப்பட உள்ளதால் விலை அனேகமாக ரூ.16.50 லட்சத்தில் துவங்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற 3 டோர் கூர்க்காவின் விலை ரூ.15.10 லட்சமாக உள்ளது.
இந்த மாடலுக்கு போட்டியாக மாருதி சுசூகி ஜிம்னி, ஆகஸ்ட் 15 வெளியிடப்பட உள்ள புதிய 5 டோர் மஹிந்திரா தார் அர்மடா உள்ளிட்டவை இந்திய சந்தையில் உள்ளன.