வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் கட்டணமாக ரூ.999 ஆக வசூலிக்கப்படுகின்றது. இந்த ஸ்கூட்டர் மாடலில் இரு விதமான பேட்டரி ஆப்ஷனும் பெற வாய்ப்புள்ளது.
மிகப்பெரிய இருக்கை, 400 மிமீ தண்ணீரில் பயணிக்கின்ற வீடியோ மற்றும் பேட்டரியை 40 அடி பள்ளத்தில் வீசி சோதனை செய்யப்பட்ட காட்சிகள் என ரிஸ்டா வருகை குறித்து தொடர்பாக பல்வேறு டீசர்களை ஏத்தர் வெளியிட்டு வரும் நிலையில் முன்பாக விற்பனையில் கிடைக்கின்ற 450S, 450X ஆகிய மாடல்களில் உள்ள 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெறக்கூடும்.
3.7Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 150-160 கிமீ தொலைவு பயணிக்கலாம். அடுத்து குறைந்த விலை 2.9Kwh பேட்டரி கொண்ட மாடல் 111-125 கிமீ ரேஞ்சு வழங்கலாம்.
ரிஸ்டாவில் இடம்பெற உள்ள டிஜிட்டல் கிளஸ்ட்டரானது 7 அங்குல தொடுதிரை டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றதாக அமைந்துள்ளது. இந்த கிளஸ்ட்டர் முன்பாக 450X ஸ்கூட்டரில் உள்ளதை போன்றே இருக்கலாம் என கூறப்படுகின்றது.
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ACDC 24 (Ather Community Day Celebration 2024) அரங்கில் ஏத்தர் ரிஸ்டா விற்பனைக்கு ரூ.1.20 லட்சத்தில் வெளியிடப்படலாம்.