சென்னை: ஜே.எஸ். நந்தினி இயக்கத்தில் நவீன் சந்திரா, சுனைனா, கண்ணா ரவி, குமரவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் புத்தம் புதிய ஹாரர் மிஸ்ட்ரி வெப்சிரீஸ் தான் இன்ஸ்பெக்டர் ரிஷி. 10 எபிசோடுகளுடன் நீண்ட நெடிய வெப்சீரிஸாக வந்திருந்தாலும் ஒவ்வொரு எபிசோடும் அடுத்தடுத்த எபிசோடுகளை ஒரே மூச்சில் பார்க்க வைத்து விடுகிறது.